search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
    X

    பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

    • அரசு மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்குவதன் மூலம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் உறுதி செய்யப்பட வேண்டும்.
    • மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்கப்படுவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களில் 500 பேருக்கு இணைப்பு பேராசிரியர்களாகவும், இணைப்பு பேராசிரியர்களில் 450 பேருக்கு பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளித்து ஒரு வாரம் கடந்தும் கூட, அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இது எந்த வகையிலும் நியாயமல்ல.

    கடந்த காலங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் இருந்தாலும் கூட, பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களை ஒரு கல்லூரியில் இருந்து இன்னொரு கல்லூரிக்கு இடமாற்றம் செய்து, அங்கீகாரம் பெறுவது வழக்கமாக இருந்து வந்தது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கைரேகை வழி வருகைப் பதிவு, கண்காணிப்பு கேமிராக்கள் கட்டாயமயமாக்கப்பட்டு விட்ட நிலையில் அது இனி சாத்தியமாகாது. அரசு மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்குவதன் மூலம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் உறுதி செய்யப்பட வேண்டும். மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்கப்படுவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×