search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., மருது பாண்டியர்களுக்கு உருவ சிலை- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., மருது பாண்டியர்களுக்கு உருவ சிலை- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலி வூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி.யின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
    • 1.47 கோடி ரூபாய் செலவில் பெருங்கா நல்லூரில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்ட பத்தையும் திறந்து வைத்தார்.

    சென்னை:

    சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்ட பொம்மன் திருவுருவச்சிலை, 34 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் உருவச்சிலை மற்றும் 43 லட்சம் ரூபாய் செலவில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலி வூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி.யின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, மு.பெ. சாமிநாதன், மேயர் ஆர். பிரியா, செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், சுதந்திரப்போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் ஆகியோருக்கு உருவச்சிலைகளுடன் கூடிய அரங்கங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    மேலும், 1.47 கோடி ரூபாய் செலவில் பெருங்கா நல்லூரில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்ட பத்தையும் திறந்து வைத்தார்.

    Next Story
    ×