என் மலர்
தமிழ்நாடு
வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி மரியாதை
- தமிழ் நிலத்தின் தலை வணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாள்.
- தெலுங்கானா கவர்னரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை:
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன்.
இவரின் 266-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தெலுங்கானா கவர்னரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, வெள்ளக்கோவில் சாமிநாதன், ரகுபதி, கீதாஜீவன், மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், பரந்தாமன், தாயகம் கவி, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ் நிலத்தின் தலை வணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், தம்பித்துரை, வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், கோகுல இந்திரா, டி.கே.எம்.சின்னைய்யா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, சத்யா, ராஜேஷ், ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, கந்தன், வேளச்சேரி அசோக், சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ், துணைச் செயலாளர் இ.சி.சேகர், பேரவை துணை செயலாளர் வேளச்சேரி மூர்த்தி, வேளச்சேரி சரவணன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் எல்லார் செழியன், கூத்தன், கோபிநாதன், பரசுராமன், ஸ்டார் பிரபா, வேணு, மனோகர், கோபிநாத், தில்லைராஜ், வி.கே.பி.நாராயணன், நெல்லை கூட்டுறவு வங்கி சேர்மன் ஏ.பி.பால்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்.பி. வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் வீரன் அழகு முத்துக்கோன் வரலாற்று சிறப்பை போற்றி கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.
எழும்பூரில் உள்ள சிலைக்கு பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் உருவச் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.ராசேந்திரன், மா.வை.மகேந்திரன், புதுக்கோட்டை செல்வம், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் மல்லிகா தயாளன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் ஜெ.சிக்கந்தர், சிக்கந்தர், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்த சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் இன்று. எட்டையபுர மன்னரின் முக்கிய தளபதியாக திகழ்ந்து, மன்னர், பாமர மக்கள் உள்ளிட்டோர் மீது போர் தொடுத்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர் அழகுமுத்துக்கோன். அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம் என வீர முழக்கமிட்ட வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த இந்த நன்நாளில் அவரது விசுவாசம், அர்ப்பணிப்பு, தியாக உணர்வு ஆகியவற்றை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நிர்வாகிகள் சிவக்குமார், சந்தானம், மடிப்பாக்கம் ரவி, முருகேச பாண்டி, பல்லாவரம் ராஜ், மணிராஜ், பாலமுருகன், தி.நகர் ரமேஷ், கருணாதாசன், சக்திவேல், கவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் தலைவர் நாசே. ராமச்சந்திரன் எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வேலு மனோகரன், எத்திராஜ், செல்வராஜ், பாண்டியன், போஸ், பன்னீர்செல்வம், சுப்பிரமணியன், ராஜகோபால், முத்துலட்சுமி, பொட்டல் துரை, சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோகுலம் மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் வீரன்அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர்கள் ரெங்கராஜுலு, மோகன், துரைபாபு, அரிகிருஷ்ணன், ஏழுமலை, பெருமாள், ராஜ மன்னார், மோகனகிருஷ்ணன், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
யாதவ மக்கள் இயக்கம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கம் கு.ராஜாராம் தலைமையில் வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் இசக்கி முத்து மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.