என் மலர்
தமிழ்நாடு

பிரதமர் மோடியின் தாயார் மறைவு- அகமதாபாத் செல்லும் ஈபிஎஸ், ஓபிஎஸ்
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நன்பகல் 12 மணிக்கு தனி விமானம் மூலம் அகமதாபாத்திற்கு செல்கிறார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பிரதமர் மோடியின் தாயாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நன்பகல் 12 மணிக்கு தனி விமானம் மூலம் அகமதாபாத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் வகையில், முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித் தனி விமானம் மூலம் இன்று நன்பகல் 12 மணியளவில் அகமதாபாத் புறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Next Story