என் மலர்
தமிழ்நாடு
X
தீபாவளி சிறப்பு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை 28-ந் தேதி நடக்கிறது
ByMaalaimalar18 Oct 2023 12:54 PM IST
- தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் செயலாளர், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக துறை இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து எந்தெந்த தேதியில் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த வருடம் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக சிறப்பு பஸ்கள் விடுவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
தலைமை செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் செயலாளர், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக துறை இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து எந்தெந்த தேதியில் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படுகிறது. பொது போக்குவரத்து அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை விட கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story
×
X