என் மலர்
தமிழ்நாடு
கீழே கிடந்த குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போட்ட யானை
- கீழே குப்பை கிடந்தாலும் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற எண்ணம் கூட பலருக்கும் வருவதில்லை.
- கீழே கிடந்த குப்பையை பார்த்ததும் தனது தும்பிக்கையால் அதை எடுத்து அழகாக குப்பை தொட்டிக்குள் போடுவதை காண முடிகிறது.
பொது இடங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளுங்கள் என எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலர் அதை கண்டுகொள்வதில்லை. மாறாக குப்பைகளை பொது இடங்களிலேயே வீசி செல்கின்றனர். சாலையில் நடந்து செல்லும்போது கீழே குப்பை கிடந்தாலும் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற எண்ணம் கூட பலருக்கும் வருவதில்லை. ஆனால் ஐந்தறிவு கொண்ட யானை ஒன்று பொது இடங்களில் சுகாதாரத்தை பராமரிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு யானை நடந்து வந்து கொண்டிருக்கிறது. அப்போது கீழே கிடந்த குப்பையை பார்த்ததும் தனது தும்பிக்கையால் அதை எடுத்து அழகாக குப்பை தொட்டிக்குள் போடுவதை காண முடிகிறது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் யானைக்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களுக்கு இருப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.