என் மலர்
தமிழ்நாடு
X
தங்கம் விலை மேலும் குறைந்தது
BySuresh K Jangir2 Sept 2022 12:19 PM IST
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,560-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ. 58-க்கும், கிலோ ரூ.58 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. ஆவணி மாதம் முகூர்த்த காலம் என்பதால் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பது வழக்கம்.
சென்னை:
சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கிராம் நேற்று ரூ. 4,710-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,695 ஆக குறைந்துள்ளது.
பவுன் ரூ.37 ஆயிரத்து 680-ல் இருந்து ரூ. 37,560-ஆக குறைந்து இருக்கிறது. இன்று ஒரே நாளில் தங்கம் கிராம் ரூ.15-ம், பவுன் ரூ.120-ம் குறைந்து இருக்கிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ. 58-க்கும், கிலோ ரூ.58 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. ஆவணி மாதம் முகூர்த்த காலம் என்பதால் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது தங்கம் விலை குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
X