என் மலர்
தமிழ்நாடு
மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
- மகாத்மா காந்தியின் புகழை போற்றி பாடும் பஜனை பாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை:
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் அங்கு மகாத்மா காந்தியின் புகழை போற்றி பாடும் பஜனை பாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை கொண்ட பஜனை குழுவினர் பங்கேற்று மகாத்மா காந்தியின் புகழை போற்றும் வகையில் பஜனை பாடல்களை பாடினார்கள்.
இதனை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கேட்டு ரசித்தனர்.