என் மலர்
தமிழ்நாடு

ஓ.பி.எஸ். தாயார் படத்திற்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அஞ்சலி செலுத்தினார்.
ஓ.பி.எஸ். தாயார் மறைவு- எச்.ராஜா நேரில் சென்று ஆறுதல்
- பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் தேனி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் ஓ.பி.எஸ். தாயார் பழனியம்மாள் நாச்சியார் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
- ஓ.பி.எஸ். மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). வயது மூப்பால் கடந்த மாதம் 24ம் தேதி மரணமடைந்தார்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் தேனி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் நேரில் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தாயார் பழனியம்மாள் நாச்சியார் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.