என் மலர்
தமிழ்நாடு
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில் விட்டு விட்டு பெய்யும்...
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
- ஒரு சில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட்டில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது.
மேட்டுப்பாளையம் பில்லூர் அணை 15 செ.மீ., திருநெல்வேலி மூலக்கரை பட்டி 14 செ.மீ., அவினாசி நம்பியூர் 12 செ.மீ., ஆழியார் 11 செ.மீ. வத்திராயிருப்பு, தூத்துக்குடி, பவானிசாகர், விருதுநகர், ராஜபாளையம், கரூர் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் மழை விட்டு விட்டு பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.