என் மலர்
தமிழ்நாடு

மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகை அருகே நாளை ஆர்ப்பாட்டம்- வேல்முருகன், திருமாவளவன் பங்கேற்கிறார்கள்

- சென்னை கவர்னர் மாளிகை அருகே நாளை மதியம் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், பேராசிரியர் சுப வீரபாண்டியன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
சென்னை கவர்னர் மாளிகை அருகே நாளை மதியம் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர், இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த.வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், பேராசிரியர் சுப வீரபாண்டியன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உபா சட்டத்தையும், என்.ஐ.ஏ. அமைப்பையும் பயன்படுத்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் கவர்னரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் திரளாகபங்கேற்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.