search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. கூட்டணிக்கு விடுதலை சிறுத்தை வந்தால் அதிக இடங்கள் கிடைக்கும்- ஜெயக்குமார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க. கூட்டணிக்கு விடுதலை சிறுத்தை வந்தால் அதிக இடங்கள் கிடைக்கும்- ஜெயக்குமார்

    • கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர்.
    • மோடி வருகையால் எந்தவித மாற்றமும் தாக்கமும் ஏற்படப் போவதில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருப்பேன் என தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர்.

    அதற்கு அவர் யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, எங்களுக்கான தனித்தன்மை இருக்கு. அதற்கான அடையாளம் இருக்கிறது. அதிமுக தனியாக நின்று கூட சாதனை படைத்திருக்கிறது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

    2016, 2014 இரண்டு தேர்தல்களில் தனியாக நின்றோம். அதே நேரத்தில் ஒரு கட்சி கூட்டணிக்கு விரும்பினால் அதை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும். அதைத்தான் நான் சொன்னேன்.

    எங்கள் கட்சியை பொறுத்தவரை வாங்க வாங்க என்று யாரையும் பத்திரிகை வைத்து அழைக்கவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. அப்படிப்பட்ட கட்சியும் இல்லை. யாராக இருந்தாலும் சரி அவர்கள் வருவதை கட்சி முடிவு செய்யும்.

    விடுதலை சிறுத்தைகள் குறித்து நான் சொன்ன கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. தி.மு.க. கூட்டணி குறித்து இழுபறி இழுபறி என தகவல் வருகிறது. அதைத்தான் நானும் சொன்னேன்.

    அதை நான் சொல்லக்கூடாதா இன்னும் அவர்கள் கூட்டணி இறுதி செயப்படவில்லை?

    திமுக வெறும் சில்லறை கட்சிகளுடன் மட்டுமே இப்போது இடங்களை முடித்துள்ளது. இன்னும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளுக்கு இடங்கள் இறுதியாகவில்லை.

    கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். அவர்கள் வந்தால் அவர்களுக்கு தான் அதிக இடம் கிடைக்கும். திமுகவில் ஒரு இடம் கிடைக்க போவதில்லை. எந்த வண்டி வேகமாக போகிறதோ அந்த வண்டியில் தான் ஏறுவார்கள்.

    பா.ஜ.க.வை, அதிமுக கழட்டிவிட்ட பிறகு திமுக அதற்கு முன்பு சர்வாதிகாரமாக இருந்தது. இப்போது திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் திமுகவை மிரட்டுகிறார்கள். உங்களுக்கு உரிய தொகுதியை கொடுங்கள் எங்களுக்குரிய இடங்களை கொடுங்கள் என்று மிரட்டுகிறார்கள். இல்லையென்றால் அண்ணா திமுகவுக்கு போய்விடும் என்று சொல்கிறார்கள்.

    கெஞ்சி கூத்தாடி கட்டிப்பிடித்து அனைத்து கூட்டணியை வைத்திருக்கிறது திமுக. அது எப்போது உடையும் என்று தெரியாது. பத்து நாள் இருக்கிறது பொறுத்திருந்து பாருங்கள்.

    மோடி வருகையால் எந்தவித மாற்றமும் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. அது வீண் முயற்சி ஏனெனில் இது திராவிட மண்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×