என் மலர்
தமிழ்நாடு
X
நடிகை திரிஷாவுடன் தொடர்பு படுத்தி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை அவதூறாக பேச ஐகோர்ட்டு தடை
ByMaalaimalar28 Feb 2024 12:33 PM IST (Updated: 28 Feb 2024 12:33 PM IST)
- ஏ.வி.ராஜூவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.
- வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை:
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலத்தையும், நடிகை திரிஷாவையும் தொடர்புபடுத்தி அ.தி.மு.க.வில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏ.வி.ராஜூ சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஏ.வி.ராஜூவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக கேட்டும், தன்னைப் பற்றி மேலும் அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கிற்கு பதில் அளிக்கும்படி ஏ.வி.ராஜூவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வெங்கடாசலம் குறித்து அவதூறாக பேசவும் அவருக்கு இடைக்கால தடை விதித்தார்.
Next Story
×
X