என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மாவட்டந்தோறும் புகார்கள் தெரிவிக்க அதிகாரிகள்- செல்போன் எண்கள் அறிவிப்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மாவட்டந்தோறும் புகார்கள் தெரிவிக்க அதிகாரிகள்- செல்போன் எண்கள் அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/12/1879962-phon.webp)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மாவட்டந்தோறும் புகார்கள் தெரிவிக்க அதிகாரிகள்- செல்போன் எண்கள் அறிவிப்பு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- அனைத்து புகார்களும், குறைகேள் அலுவலரால் புகார் பெற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது.
- வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளர்களின் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி என 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விதி அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள் தவிர அனைத்து புகார்களும், குறைகேள் அலுவலரால் புகார் பெற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது. மீதமுள்ள புகார்கள் 60 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது. குறை தீர்ப்பாளர்களின் விவரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம்-சைமன் அருள்பிரகாசம் (89258 11340), செங்கல்பட்டு - தினேஷ்குமார் மார்ட்டின் (89258 11302), காஞ்சிபுரம்- கணேசன் (89258 11309).
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளர்களின் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.