search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்- தாலி எடுத்து கொடுத்து மகேந்திரன்-தீபாவின் திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர்

    • திருமணத்தையொட்டி அதிகாலையிலேயே மருத்துவமனை களை கட்டியது.
    • அன்பு உபசரிப்பில் புன்னகை மகிழ சரியாக 9.15 அளவில் தீபா கழுத்தில் மகேந்திரன் தாலி கட்டினார்.

    சென்னை:

    இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று... என்பது போல,

    கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்ற பட்டதாரிகளான மகேந்திரன்-தீபா ஆகியோர் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது திருமணம் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை முன்பு உள்ள சித்தி புத்தி விநாயகர் ஆலயத்தில் இன்று வேத மந்திரங்களுடன் கெட்டி மேளங்கள் முழங்க நடந்தது.

    இவர்களது திருமணத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுத்து நடத்தி பரிசு வழங்கி வாழ்த்தினார்.

    திருமணத்தையொட்டி அதிகாலையிலேயே மருத்துவமனை களை கட்டியது. தங்கள் வீட்டு திருமணம் போல் மருத்துவ அதிகாரிகள், டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் பட்டுப் புடவை மற்றும் வேஷ்டி சட்டையுடன் வந்து மணமகனையும், மணமகளையும் அலங்கரித்து திருமணம் நடக்கும் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

    திருமணம் தொடங்கியது முதல் முடியும் வரை அனைத்து சடங்கு, சம்பிரதாயம் வரை அவர்களே நின்று குடும்ப விழாபோல் நடத்தி மகிழ்ந்தனர். அவர்களின் அன்பு உபசரிப்பில் புன்னகை மகிழ சரியாக 9.15 அளவில் தீபா கழுத்தில் மகேந்திரன் தாலி கட்டினார். பின்பு இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு வெற்றியழகன் எம்.எல்.ஏ., கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் நாராயண பாபு, ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். அனைவரையும் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பூர்ணா சந்திரிகா வரவேற்றார்.

    மணக்கோலம் கண்ட மகேந்திரன்-தீபா கூறும் போது, 'எங்கள் வாழ்க்கையில் இன்று மிகவும் சந்தோசமான மறக்க முடியாத நாள். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்' என்றனர்.

    Next Story
    ×