search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை- அமைச்சர் வழங்கினார்
    X

    மல்லிகார்சுணர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது


    கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை- அமைச்சர் வழங்கினார்

    • கோவில்களிலிருந்து பிற மாநிலங்களில் உள்ள கோவியில்களுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
    • மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்படும்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திர பிரதேசம் ஸ்ரீ சைலம் மல்லிகார்சுணர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

    பின்பு ஸ்ரீ சைலம் மல்லிகார்சுணர் கோவிலில் வஸ்திர மரியாதை செய்துவிட்டு சுவாமி தரிசனம் முடித்து அமைச்சர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களிலிருந்து பிற மாநிலங்களில் உள்ள கோவியில்களுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோவில் மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் இருந்து திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி கோவிலுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகின்றது.

    கடந்த 2022 -2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழகத் கோவில்களிலிருந்து இதர மாநிலக் கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலிருந்து கேரளா, சபரிமலை சாஸ்தா கோவிலுக்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திரா ஸ்ரீசைலம் ஸ்ரீ மல்லிகார்சுணர் ஆலயத்திற்கும், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து கர்நாடகம், மைசூர், சாமுண்டிஸ்வரி அம்மன் கோவிலுக்கும், சமயபுரம் மாரியம்மன் கோவிலிருந்து மத்தியபிரதேசம், உஜ்ஜயினி, ஸ்ரீ மகா காளேஸ்வரர் ஆலயத்திற்கும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து உத்தரபிரதேசம், காசி, ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்திற்கும், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிருந்து உத்தரகாண்ட் ஸ்ரீ கேதர்நாத் கோவிலுக்கும் வஸ்திர மரியாதை செய்யப்படுகிறது.

    திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலிருந்து ஒரிசா, பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கும், திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவிலிருந்து குஜராத் சோம்நாத், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவிலுக்கும், கன்னியாகுமரி, திருவட்டாறு, ஆதிகேசவப் பெருமாள் கோவிலிருந்து, திருவனந்தபுரம், ஸ்ரீபத்மநாத சுவாமி கோவிலுக்கும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலிருந்து கர்நாடகம், மங்களூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், காஞ்சிபுரம் எம்பார் கோவிலிருந்து கர்நாடகம் ஸ்ரீ செலுவ நாராயணப் பெருமாள் கோவிலுக்கும், சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலிருந்து அகோபிலம் நரசிம்மர் ஆலயத்திற்கும் வஸ்திர மரியாதை வழங்குவது தொடர்பாக கோவிலின் பழக்க வழக்கத்தினை கருத்திற்கொண்டும் மற்றும் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்களை கலந்தா லோசித்தும் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சம்மதம் பெற்று விவரம் தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இதில் முதற்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திர பிரதேசம் ஸ்ரீ சைலம் மல்லிகார்சுணர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனால் இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×