என் மலர்
தமிழ்நாடு

விக்கிரவாண்டி ஆசிரமத்தில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

- தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தட்ரா விழுப்புரம் வந்துள்ளார்.
- சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள காஞ்சனா தட்ரா இன்று குண்டலப்புலியூர் செல்கிறார். அங்கு ஆசிரமத்தில் ஆய்வு செய்கிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் செயல்பட்டு வந்தது.
இந்த ஆசிரமத்தில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது.
இது குறித்த புகாரின் பேரில் காப்பக உரிமையாளர் ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றது. இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தட்ரா விழுப்புரம் வந்துள்ளார். இங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள அவர் இன்று குண்டலப்புலியூர் செல்கிறார். அங்கு ஆசிரமத்தில் ஆய்வு செய்கிறார்.
ஆசிரமத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர். இந்த ஆவணங்களையும் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தட்ரா பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.