என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பாதுகாப்பு இல்லை... தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் ரத்து
- செய்துங்கநல்லூரில் சோதனை சாவடி அமைத்து வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
- மழை பாதித்த 4 மாவட்டங்களுக்கு தினசரி 300 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 84.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்துங்கநல்லூரில் சோதனை சாவடி அமைத்து வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மழை, வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கினால் பாதுகாப்பு இல்லை என்பதால் இம்முடிவு எனவும் தெரிவித்துள்ளது.
மழை பாதித்த 4 மாவட்டங்களுக்கு தினசரி 300 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.