என் மலர்
தமிழ்நாடு
X
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை- தருமபுரி கலெக்டர் சாந்தி உத்தரவு
ByMaalaimalar26 July 2023 12:58 PM IST
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
- சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்தார்.
தருமபுரி:
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்தார். இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
X