என் மலர்
தமிழ்நாடு

தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல்... தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- வழிநெடுகிலும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமாக விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதனையடுத்து, மியாட் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்ட வாகனம், சுமார் ௩ மணிநேரம் மக்கள் வெள்ளத்தில் மெல்ல ஊர்ந்து தே.மு.தி.க. தலைமை அலுவலகம் சென்றடைந்தது. விஜயகாந்த் உடலுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் மறைவையொட்டி தலைமை கழகத்தில் தே.மு.தி.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 15 நாட்கள் தே.மு.தி.க. அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.