என் மலர்
தமிழ்நாடு

X
செல்லப் பிராணிகள் கண்காட்சி- விதவிதமான நாய்கள், பூனைகள், கிளிகள் பொதுமக்களை கவர்ந்தன
By
Suresh K Jangir25 March 2023 2:53 PM IST (Updated: 25 March 2023 2:53 PM IST)

- கண்காட்சியில் செல்லப்பிராணிகள் தொடர்பான சிறந்த தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டன.
- அயல்நாட்டுப் பறவைகள் மற்றும் விலங்குகளின் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தன.
சென்னை:
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி தொடங்கியது. இதனை பார்க்க பொதுமக்கள் ஆர்வமாக வந்தனர்.
இந்த கண்காட்சியில் விதவிதமான நாய்கள், கிளிகள் மற்றும் பறவைகள், பூனைகள், வெளிநாட்டு ஓணான் வகைகள், முயல்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் பொதுமக்கள் கண்காட்சிக்காக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். நாளை மாலை வரை கண்காட்சி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் செல்லப்பிராணி தொழில் வல்லுநர்கள், செல்லப்பிராணி பெற்றோர் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் செல்லப்பிராணிகள் தொடர்பான சிறந்த தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டன. அயல்நாட்டுப் பறவைகள் மற்றும் விலங்குகளின் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தன.
Next Story
×
X