search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆவின் பால் பாக்கெட்டில் தீபாவளி சுவீட் முன்பதிவு தகவல்
    X

    ஆவின் பால் பாக்கெட்டில் தீபாவளி சுவீட் முன்பதிவு தகவல்

    • தீபாவளி பண்டிகைக்கு புதிய ஆவின் இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு விறு விறுப்பாக விற்பனை நடந்து வருகிறது.
    • தமிழகம் முழுவதும் ஆவின் இனிப்பு விற்பனை சூடுபிடித்துள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு புதிய ஆவின் இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு விறு விறுப்பாக விற்பனை நடந்து வருகிறது.

    அரசு துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்க ஆவின் இனிப்புகளை ஆர்டர் செய்து வருகின்றனர்.

    ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்று வரை ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ஆவின் இனிப்பு விற்பனை சூடுபிடித்துள்ளது. பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் அதிகளவில் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். சென்னையில் 27 இடங்களில் ஆவின் இனிப்புகள் வாங்க முன்பதிவு செய்யலாம். ஆவின் பார்லர்களிலும் வாங்கலாம். பொதுமக்கள் ஆவின் இனிப்புகளை வாங்கி தீபாவளியை கொண்டாட ஆவின் பால் பாக்கெட்டுகளில் தொடர்பு எண்கள் பிரசுரிக்கப் பட்டுள்ளன.

    இனிப்பு தேவைப் படுபவர்கள் அந்த எண்களில் தொடர்பு கொண்டால் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.

    ஆவின் அனைத்து பால் பாக்கெட்டுகளிலும் தீபாவளி இனிப்பிற்கான விவரங்களை தெரிவிக்கப் பட்டுள்ளன. சிகப்பு நிற பால் பாக்கெட் அதிக உற்பத்தி செய்வதாகவும், ஆரஞ்சு பாக்கெட் குறைவாக வினியோகம் செய்வதாகவும் கூறுவது தவறான தகவல்.

    பொதுமக்கள் விருப்பத்திற்கேற்ப 6 வகையான ஆவின் பாக்கெட் சென்னையில் வழங்கப்படுகிறது. ஆரஞ்சு பாக்கெட் தினமும் 4 லட்சம் தயாரிக்கப்படுகிறது. சிகப்பு நிற ஆவின் பால் பாக்கெட் 15 ஆயிரம் வினியோகிக்கப்படுகிறது. ஆரஞ்சு உற்பத்தியை குறைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×