என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பஞ்சாப் மாநிலத்தில் தேனி ராணுவ வீரர் திடீர் மரணம் பஞ்சாப் மாநிலத்தில் தேனி ராணுவ வீரர் திடீர் மரணம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/08/1962560-theni.webp)
ராணுவவீரர் அறிவகம்.
பஞ்சாப் மாநிலத்தில் தேனி ராணுவ வீரர் திடீர் மரணம்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அறிவகம் அதன்பின்னர் மீண்டும் பணிக்கு சென்றார்.
- அறிவகத்தின் உடலை நாளை சொந்தஊர் கொண்டுவர உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே முருக்கோடையை சேர்ந்தவர் அறிவகம்(36). இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 16 வருடத்திற்கு முன்பு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி பஞ்சாப் மாநிலத்தில் கடைசியாக பணியாற்றினார்.
கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அறிவகம் அதன்பின்னர் மீண்டும் பணிக்கு சென்றார். பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் தங்கியிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவருடன் பணிபுரிந்தவர்கள் அறிவகத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்.
இதுகுறித்து சொந்தஊரில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கண்ணீர் விட்டு கதறிஅழுதனர். அறிவகத்தின் உடலை நாளை சொந்தஊர் கொண்டுவர உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். பணிக்கு சென்ற ராணுவவீரர் உயிரிழந்ததால் அந்த கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.