search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேகர்ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயமான திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் மரணம்
    X

    சேகர்ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயமான திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் மரணம்

    • கடந்த 18-ந்தேதி திடீரென சந்திரமவுலிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
    • ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சந்திரமவுலி அனுமதிக்கப்பட்டார்.

    சென்னை:

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவரும், தொழில் அதிபருமான சேகர்ரெட்டி மகளுக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான தர்மா என்பவரின் மகன் சந்திரமவுலிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

    அடுத்த மாதம் (ஜனவரி) 26-ந்தேதி இவர்களது திருமணத்தை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மணமகன் சந்திரமவுலி தனது திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார். கடந்த 18-ந்தேதி திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சந்திரமவுலி மரணம் அடைந்தார்.

    இது இரு வீட்டார் குடும்பத்தினர் மத்தியிலும் அவர்களது உறவினர்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×