என் மலர்
தமிழ்நாடு
டிசம்பர் மாதம் வரப்போகுது... உடனே டவுன்லோடு செய்யுங்கள் இந்த App
- செயலியில் மழை பாதிப்புகள் தொடர்பாகவும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
- சாலை பிரச்சனை, வெள்ள பாதிப்பு பிரச்சனைகள் உள்ளிட்டவை பற்றியும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவிடலாம்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'டிஎன்.அலர்ட்' என்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்தார்.
பருவ மழைக்கான முன் எச்சரிக்கை தகவல்கள், வானிலை மைய தகவல்கள், அணைகளில் நீர் இருப்பு விவரங்கள் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் பருவமழை எச்சரிக்கை பற்றிய தகவல்களை முன் கூட்டியே தெரிந்து கொள்ளலாம். உங்களது செல்போனில் டிஎன்.அலர்ட் செயலி இல்லையென்றால் உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, இந்த செயலியில் மழை பாதிப்புகள் தொடர்பாகவும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் சாலை பிரச்சனை, வெள்ள பாதிப்பு பிரச்சனைகள் உள்ளிட்டவை பற்றியும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவிடலாம் என்று தெரிவித்து உள்ளனர்.