என் மலர்
தமிழ்நாடு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பினராயி விஜயன், கமல், விஜய்
- முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதே போல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அன்புத்தோழர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசிலமைப்பின் கூறான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்களின் உறுதியான நிலைப்பாடு ஊக்கமளிக்கிறது. முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன் என கூறியுள்ளார்.
சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு @mkstalin அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். @CMOTamilnadu pic.twitter.com/QKF8hyRI2M
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2024
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) March 1, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.