என் மலர்
தமிழ்நாடு
சாப்பாட்டு ராமன் போட்டி- 10 நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணி, கோழிக்கறியை வெளுத்துக்கட்டி பரிசு வென்ற இளைஞர்
- ஊரில் உள்ள சிறுசு முதல் பெருசு வரை மகிழ்ச்சி அடையும் வகையில் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பல்வேறு வகையான போட்டிகளை வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு ஊர் கவுண்டர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி காளியப்பன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
தருமபுரி:
தருமபுரி அருகே உள்ள முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் ஒரு பகுதியாக மாமியார்-மருமகள் கயிறு இழுக்கும் போட்டி போன்றவையும் நடந்தன. இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இதனிடையே இளைஞர்களுக்கு ஒரு கிலோ சில்லி சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிடும் சாப்பாட்டு ராமன் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் வேகமாக சில்லி சிக்கன் மற்றும் பிரியாணியை சாப்பிட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
முடிவில் ஒரு கிலோ சில்லி சிக்கனை 10 நிமிடத்தில் வெற்றிவேல் என்ற இளைஞர் சாப்பிட்டு, சாப்பாடு ராமன் பட்டத்தை தட்டி சென்றார். இதேபோல் பிரியாணி சாப்பிடும் போட்டியில் கஜேந்திரன் என்பவர் முதல் பரிசை பெற்றார். அரை கிலோ ஐஸ்கிரீமை 7 நிமிடத்தில் ராஜ்குமார் என்பவர் சாப்பிட்டு வெற்றி பெற்றார்.
ஊரில் உள்ள சிறுசு முதல் பெருசு வரை மகிழ்ச்சி அடையும் வகையில் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பல்வேறு வகையான போட்டிகளை வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ஊர் கவுண்டர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி காளியப்பன் ஆகியோர் பரிசு வழங்கினர்.