என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![திருமாவளவன் வடபழனி ஆஸ்பத்திரியில் அனுமதி திருமாவளவன் வடபழனி ஆஸ்பத்திரியில் அனுமதி](https://media.maalaimalar.com/h-upload/2023/09/26/1956124-thirumavalavan.webp)
திருமாவளவன் வடபழனி ஆஸ்பத்திரியில் அனுமதி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார்.
- வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வைரஸ் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார்.
வடபழனி கட்சி அலுவலகத்தில் அவர் மணிக்கணக்கில் நின்றுகொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்ததில் மிகவும் சோர்வடைந்து விட்டார். உடல் வலி அதிகமாகி காய்ச்சலும் அவருக்கு வந்துவிட்டது.
இதனால் அவர் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.