search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களின் உரிமைகளை கவர்னர் பறிக்கிறார்:  தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் முக்கிய விவரங்கள்
    X

    மக்களின் உரிமைகளை கவர்னர் பறிக்கிறார்: தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் முக்கிய விவரங்கள்

    • கவர்னரின் செயலற்ற தன்மை, மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
    • பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னர் முடிவெடுக்காமல் மெத்தனமாக இருந்ததை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கண்டித்தது.

    சென்னை:

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு 198 பக்கங்கள் கொண்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் உள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:-

    தமிழக அரசு பல முக்கியமான சட்ட மசோதாக்களை மாநில கவர்னருக்கு அனுப்பி வைக்கிறது. அது மட்டுமின்றி பல்வேறு கொள்கை முடிவுகளையும் அனுப்பி வைக்கிறது.

    இப்படிப்பட்ட முக்கியமான விவகாரங்களில் கவர்னர் உடனுக்குடன் முடிவு எடுப்பதில்லை. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தனது அதிகாரத்தையும் பொறுப்பையும் கவர்னர் ஆர்.என்.ரவி துஷ்பிரயோகம் செய்கிறார்.

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32-ன் கீழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் என்பது கவர்னரின் செயல்பாட்டால் மறுக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை கவர்னர் ஆர்.என்.ரவி பறிக்கிறார்.

    கவர்னரின் செயலற்ற தன்மை, மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அது மட்டுமின்றி தமிழ்நாடு கவர்னர் பல்வேறு விசயங்களில் செயலற்றவராக இருக்கிறார். இதன் மூலம் மக்களின் உரிமைகளை கவர்னர் பறித்து வருகிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பி வைக்கும் தீர்மானங்களுக்கும், சட்ட மசோதாக்களுக்கும் அவர் ஒப்புதல் அளிக்காமல் நிராகரிப்பது என்பது மக்களின் உரிமைகளை அவர் பறிப்பதாகவே அர்த்தம்.

    பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னர் முடிவெடுக்காமல் மெத்தனமாக இருந்ததை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கண்டித்தது. அதைபோல் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை அரசு பரிந்துரைத்த நிலையில் அதையும் கவர்னர் நிராகரித்திருக்கிறார்.

    இப்படி மிகவும் அத்தியாவசியமான விவகாரங்களில் கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அதுமட்டுமின்றி சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள் உள்பட 25 மசோதாக்கள் கவர்னர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளன.

    இதன் மூலம் தனது அதிகாரத்தையும், பொறுப்பையும் கவர்னர் துஷ்பிரயோகம் செய்கிறார்.

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அடுத்த கட்ட விசாரணைக்கு எடுத்துச்செல்ல கவர்னர் உத்தரவிட மறுக்கிறார்.

    கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலற்ற தன்மை மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    கவர்னரின் இத்தகைய போக்கால் தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மக்களின் உரிமைகளை கவர்னர் பறிக்கிறார் என்பதால் அவருக்கு தகுந்த உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளோம்.

    இவ்வாறு அதில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×