என் மலர்
தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்- தமிழக அரசு உத்தரவு
- தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்.
- வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில், வருவாய்த்துறை செயலாளராக ராஜா ராமன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story