என் மலர்
தமிழ்நாடு

அன்னையரை இன்று மட்டுமல்ல எந்நாளும் போற்றி வணங்குவோம்!... விஜய் வாழ்த்து
- மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.
சென்னை:
வருடந்தோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் என்பது உலகின் அனைத்து தாய்மார்களையும் போற்றி வணங்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தையை பெற்றெடுக்கும்போது எதிர்கொள்ளும் பிரசவ வலியையும், வேதனையையும் பொறுத்துக்கொள்ள அவளால் மட்டுமே முடியும். குழந்தை பிறந்த பிறகு அதன் வளர்ச்சிக்காக தன் ஒட்டுமொத்த விருப்பு, வெறுப்புகளையும் ஒதுக்கிவைத்துவிடுவாள். காலங்கள் உருண்டோடிக்கொண்டே இருக்கலாம். நாகரிகம் என்ற போர்வையில் வாழ்வியல் முறை மாறிக்கொண்டிருக்கலாம். ஆனால் தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.
இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னையரை இன்று மட்டுமல்ல எந்நாளும் போற்றி வணங்குவோம்! என்று தெரிவித்துள்ளார்.