என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![சென்னை கடற்கரையில் வீடுகளில் பூஜைக்கு வைத்த விநாயகர் சிலைகள் கரைப்பு சென்னை கடற்கரையில் வீடுகளில் பூஜைக்கு வைத்த விநாயகர் சிலைகள் கரைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/09/01/1754827-vinayagar.jpg)
சென்னை கடற்கரையில் வீடுகளில் பூஜைக்கு வைத்த விநாயகர் சிலைகள் கரைப்பு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- இன்று முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலான பொதுமக்களே கடற்கரைக்கு வந்து விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு சென்றனர்.
- நாளை (வெள்ளி) சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க அதிக அளவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து பூஜை செய்தனர்.
இந்த சிலைகளை கடலில் கரைப்பதற்காக சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், எண்ணூர் ராம கிருஷ்ணாநகர் இடங்களில் பொதுமக்கள் எடுத்து வந்தனர். அங்கு சிறிது நேரம் பூஜை செய்து கடல் தண்ணீரில் கரைத்தனர்.
இன்று முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலான பொதுமக்களே கடற்கரைக்கு வந்து விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு சென்றனர்.
நாளை (வெள்ளி) சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க அதிக அளவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணலி, வில்லிவாக்கம், செங்குன்றம், திருவேற்காடு, கோயம்பேடு, போரூர், விசாயர்பாடி, பெரம்பூர், கொடுங்கையூர், மாதவரம், கொளத்தூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கே.கே.நகர், மேடவாக்கம், பல்லாவரம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட உள்ளன.