search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை குறைந்ததால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    மழை குறைந்ததால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது.
    • முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 1109 கனஅடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கனமழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. மூலவைகையாறு, முல்லைபெரியாறு, வராகநதி உள்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். வழக்கமாக 69 அடிவரை தண்ணீர் தேக்கப்படும். இந்த ஆண்டு 70 அடியில் நிலைநிறுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் 69 அடியாக நீர்மட்டம் குறைந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக மீண்டும் உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் 10 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. நேற்று 5150 கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

    நேற்று மாலை முதல் மழைப்பொழிவு குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டு 1866 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு 36.25 கன அடி நீர் வருகிறது.

    முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 1109 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 137.25 அடியாக உள்ளது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 190 கனஅடி நீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 252 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    தேக்கடி 6.4, போடி 6.4, வைகை அணை 4, சோத்துப்பாறை 5, மஞ்சளாறு 6, பெரியகுளம் 3.2, வீரபாண்டி 3.6, அரண்மனைப்புதூர் 1, ஆண்டிபட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×