search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மறைமாவட்ட பொன்விழாவிற்கு முதலமைச்சரை அழைத்தால் பா.ஜ.க.வில் இணைவோம்- தூத்துக்குடி பாதிரியாரின் பேச்சு
    X

    பாதிரியார் அமலதாஸ்.

    மறைமாவட்ட பொன்விழாவிற்கு முதலமைச்சரை அழைத்தால் பா.ஜ.க.வில் இணைவோம்- தூத்துக்குடி பாதிரியாரின் பேச்சு

    • புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கான சலுகைகளையும் படிப்படியாக முதலமைச்சர் குறைத்து வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதாஸ். இவர் தற்போது இன்னாசியார்புரத்தில் உள்ள பாதிரியார்கள் ஓய்வு இல்லத்தில் தங்கி உள்ளார். இவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மதுக்கடைகளை மூடுவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் இதுவரை மூடப்படவில்லை. மேலும் கூடுதலாக மதுக்கடைகளை திறந்துவிட்டனர்.

    புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் மதுக்கடைகள் மூடப்படவில்லை. மேலும் கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கான சலுகைகளையும் படிப்படியாக முதலமைச்சர் குறைத்து வருகிறார்.

    இந்நிலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பொன்விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதாக தெரிகிறது.

    அவ்வாறு அழைத்தால் பா.ஜ.க., அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி போன்ற அனைத்து கட்சிகளையும் அழைக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி சார்புடையவர்களாக பொருளாகிவிடும். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதில் உறுதியாக இருந்தால் அப்படிப்பட்ட கிறிஸ்துவர்களை நம்புவதை விட பா.ஜ.க.வை நம்புவதே மேல் என முடிவு செய்து குருக்களிலேயே கொள்கை உறுதி கொண்ட நாங்கள் பொன்விழா நேரத்திலேயே அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    இதுதொடர்பாக பாதிரியார் அமலதாஸ் கூறியதாவது:

    தூத்துக்குடி மறைமாவட்ட பொன் விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மட்டும் அழைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை நான் எதிர்க்கிறேன்.

    கிறிஸ்தவ மதம் அனைவருக்கும் பொதுவானது. எனவே இந்த விழாவிற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×