search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    13-ந்தேதி மட்டும் விடுப்பு எடுத்தால் போதும்... பொங்கலுக்கு அரசு ஊழியர்களுக்கு 9 நாள் விடுமுறை
    X

    13-ந்தேதி மட்டும் விடுப்பு எடுத்தால் போதும்... பொங்கலுக்கு அரசு ஊழியர்களுக்கு 9 நாள் விடுமுறை

    • பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை.
    • 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

    பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. எனவே பொங்கலுக்கு முந்தைய நாள் 13-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட வேண்டும்.

    பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வகையில் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்தால் அதற்கு முந்தைய நாட்களான 11, 12-ந்தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகும். அதன்படி அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்து விடும்.

    Next Story
    ×