search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. விஜய்க்கு வி.சி.க.வின் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து
    X

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. விஜய்க்கு வி.சி.க.வின் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

    • நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும்
    • ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் தங்களது தங்களை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும். 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.

    திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விசிக தங்களின் நீண்ட நாள் நிலைப்பாடாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை மீண்டும் கிளறியது. குறிப்பாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இது குறித்து பேசியபோது அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது. இந்நிலையில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியதை ஆதவ் அர்ஜுனா வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது.

    அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் திரு. விஜய். அவருக்கு வாழ்த்துகள். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×