என் மலர்
தமிழ்நாடு

ஹிட்லர், முசோலினி போல் மோடி, ஸ்டாலின்... வி.சி.க.வை அழிக்கிறது தி.மு.க. - ஆதவ் அர்ஜுனா
- த.வெ.கவில் குழப்பம், சாதி பிரச்சனைனு சொல்றது, எல்லாமே தி.மு.கவோட செட்டிங்...
- யார் எந்த கூட்டணி அமைத்தாலும், த.வெ.க. தனியாக நின்றால் அமோகமாக வெற்றி பெறும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,
ஹிட்லர், முசோலினி அரசியல்போல் மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது. கேள்வி கேட்க ஆளே இருக்கக்கூடாதென நினைக்கிறது தி.மு.க.
நாம் போராடினால வழக்குப்பதிவு செய்வார்கள், மிரட்டுவார்கள். அதற்கெல்லாம் அச்சப்படக்கூடாது.
அ.தி.மு.க.வினர் நேரடியாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தனர். அதைவிட மோசமாக மத்திய அரசை எதிர்ப்பது போல தி.மு.க. நாடகமாடுகிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை எப்படி தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்.
த.வெ.கவில் குழப்பம், சாதி பிரச்சனைனு சொல்றது, எல்லாமே தி.மு.கவோட செட்டிங்... எனக்கு அவங்கள பத்தி எல்லாமே தெரியும். அங்க தான் வேல பாத்துட்டு வந்துருக்கேன். எம்.ஜி.ஆரும் அங்க இருந்து தான் வந்தாரு.
த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்க செல்லும்போது அரசியலில் பேரதிர்வுகளை ஏற்படுத்தும். யார் எந்த கூட்டணி அமைத்தாலும், த.வெ.க. தனியாக நின்றால் அமோகமாக வெற்றி பெறும் என்றார்.