என் மலர்
தமிழ்நாடு

அ.தி.மு.க. மாணவர் அணி ஆர்ப்பாட்டம்- கண்களில் கருப்பு துணி கட்டி தொண்டர்கள் பங்கேற்றனர்

- 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
- தமிழகத்தில் கடந்த 100 நாட்களில் 63 பாலியல் சம்பவங்கள் நடந்திருப்பதாக கூறி அது தொடர்பான விவரங்களை பேனர்களாகவும் வைத்திருந்தனர்.
சென்னை:
தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டி அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, முன்னாள் எம் .எல்.ஏ. புரசை வி. எஸ். பாபு, பகுதி கழக செயலாளர்கள் வெற்றிலை கே.மாரிமுத்து, பட்மேடு டி.சாரதி, கே.சி. கார்டன் எம். சந்திரசேகர், முகம்மது இம்தியாஸ், வழக்கறிஞர் இஸ்மாயில், துறைமுகம் பயாஸ், சேத்துப்பட்டு எ.சம்பத்குமார், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணிபிரசாத், 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில்.வி. ஆயிரம்விளக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன் (எ) ஆறுமுகம் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், வழக்கறிஞர் சதாசிவம். மற்றும் கொளத்தூர் கே.கணேசன், ஆவின் ஆர்.அருள்வேல், லண்டன் எம்.வெங்கடேசன், இனியன், நேரு நகர் எஸ்.கோதண்டன், வில்லிவாக்கம் ஜெய் சுரேஷ், என். கோவிந்தன், ஆதிலட்சுமி, கொளத்தூர் கிருபா, சேத்துப்பட்டு பிரகாஷ், அயன் புரம் சரவணன், மேட்டு தெரு மதன், வட்ட செயலாளர் மாரியப்பன் அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள். தமிழகத்தில் கடந்த 100 நாட்களில் 63 பாலியல் சம்பவங்கள் நடந்திருப்பதாக கூறி அது தொடர்பான விவரங்களை பேனர்களாகவும் வைத்திருந்தனர்.