search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளி பட்டாசு வெடித்ததில் ஆலந்தூர், பெருங்குடியில் காற்று மாசு அதிகம் பதிவு
    X

    தீபாவளி பட்டாசு வெடித்ததில் ஆலந்தூர், பெருங்குடியில் காற்று மாசு அதிகம் பதிவு

    • பசுமை பட்டாசுகள் அதிகளவில் தற்போது விற்பனை செய்தாலும் கூட காற்று மாசும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
    • பெருங்குடியில் பஸ் டெப்போ 230 மற்றும் வேளச்சேரி குடியிருப்பு பகுதியில் 226 ஆகவும் பதிவானது.

    சென்னை:

    தீபாவளி கொண்டாட்டத்தின் உச்சகட்ட மகிழ்ச்சி பட்டாசு வெடித்து பரவசம் அடைவது. சென்னையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட பட்டாசு அதிகளவில் விற்பனை ஆகியது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக பட்டாசு வெடித்து மகிழ்ந்ததில் சென்னை மாநகரம் புகை மண்டலமாக நேற்றிரவு காட்சி அளித்தது.

    பசுமை பட்டாசுகள் அதிகளவில் தற்போது விற்பனை செய்தாலும் கூட காற்று மாசும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. வானத்திற்கு சீறிப்பாய்ந்து. சென்று அழகிய பூக்கள், நட்சத்திரங்கள் போன்று வெடித்து சிதறும் பட்டாசுகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. 10 நிமிடம், 20 நிமிடம் வெடிக்கக்கூடிய அதிரடி வெடிகள் புகையை கக்கின. சரவெடிகள் நகரின் பல பகுதிகளிலும் வெடித்ததில் புகை மண்டலமானது. இதனால் பகலிலும், இரவிலும் பட்டாசு புகை வானில் பரவலாக சூழ்ந்தது.

    பட்டாசு வெடித்ததில் அதிகளவில் மாசு ஏற்பட்ட பகுதியாக பெருங்குடி பதிவாகி உள்ளது. காற்றின் தரக்குறியீடு ஆலந்தூரில் 246 ஆகவும், அடுத்ததாக பெருங்குடியில் பஸ் டெப்போ 230 மற்றும் வேளச்சேரி குடியிருப்பு பகுதியில் 226 ஆகவும் பதிவானது.

    சென்னையில் இந்த 3 இடங்களில் காற்று மாசு அதிகளவில் இருந்துள்ளது. அரும்பாக்கம் 163, மணலி 113, கொடுங்கையூர் 107, மணலியில் 133, ராயபுரம் 74 ஆக பதிவாகி உள்ளது.

    சென்னை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் இதனை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×