search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ம.க. வழக்கிற்கும், இதற்கும் சம்மந்தம் இல்லை- அமைச்சர் பேச்சுக்கு, அன்புமணி ராமதாஸ் பதிலடி
    X

    'பா.ம.க. வழக்கிற்கும், இதற்கும் சம்மந்தம் இல்லை'- அமைச்சர் பேச்சுக்கு, அன்புமணி ராமதாஸ் பதிலடி

    • ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு தி.மு.க. அரசு தான் கோழைத்தனத்தை பின்பற்றுகிறது.
    • தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருந்தும், எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது தான் கோழைத்தனம்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே வேட்டமங்கலம் கிராமத்தில் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி தந்தை மறைவுக்கு, அவரது இல்லத்திற்கு சென்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கும்பகோணத்தில் நேற்று நடந்த சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டில் தி.மு.க. அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாமல் கோழைத்தனத்தை பின்பற்றுகிறது என நான் பேசினேன். இதற்கு அமைச்சர் சேகர்பாபு, பாட்டாளி மக்கள் கட்சி தான் வழக்கிற்கு பயந்து, மத்திய அரசிடம் மண்டியிடுவது தான் கோழைத்தனம் என விமர்சித்து உள்ளார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

    ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு தி.மு.க. அரசு தான் கோழைத்தனத்தை பின்பற்றுகிறது. பீகார், தெலுங்கானா, ஜார்கண்ட், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு இந்திய சட்டம் 2008-ன் படி நடத்தி உள்ளனர். தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருந்தும், எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது தான் கோழைத்தனம்.

    பா.ம.க. வழக்கிற்கும், இதற்கும் சம்மந்தம் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையா? அதிகாரத்தை வைத்துக் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று பொய் சொல்வது தான் கோழைத்தனம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×