என் மலர்
தமிழ்நாடு

தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்குவது தான் பா.ஜ.க.வின் நோக்கம்- அண்ணாமலை
- கட்சியை விட தமிழக மக்களின் நலன் தான் முக்கியமானது.
- கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பேது அவர் கூறியதாவது:-
2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்திற்கு மிக முக்கியமான தேர்தல்.
கூட்டணிக்கான காலத்திற்கு இன்னும் அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்து தற்போதைக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை.
கட்சியை விட தமிழக மக்களின் நலன் தான் முக்கியமானது.
திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்குவது தான் பாஜகவின் நோக்கம்.
கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story