என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் அ.தி.மு.க. - மு.க.ஸ்டாலின்
    X

    அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் அ.தி.மு.க. - மு.க.ஸ்டாலின்

    • சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக வீண் புரளிகளை பரப்பி வருகின்றனர்.
    • குற்றங்கள் எண்ணிக்கை தி.மு.க. ஆட்சியில் குறைந்துவருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு போடுகிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் மதுரையில் காவலர் படுகொலை செய்யப்பட்டது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் சொல்வதற்கு தயாராக இல்லை என்றார்.

    தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டனர்.

    இதனிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * எந்த பிரச்சனையாக இருந்தாலும் சபாநாயகரிடம் அனுமதி பெற்ற பின் தான் பேச வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நினைத்த நேரத்தில் பேச அனுமதி அளிக்க முடியாது.

    * அவை மரபை பின்பற்றி அ.தி.மு.க.வினர் செயல்பட வேண்டும்.

    * மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் கொலை, கொள்ளையை ஊதி பெரிதாக்கி மக்களிடையே பீதி ஏற்படுத்துகின்றனர்.

    * அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியுமா என துடிக்கிறார்கள்.

    * தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு சிலர் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருப்போருக்கு அ.தி.மு.க.வும் தூபம் போடுகிறது.

    * சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக வீண் புரளிகளை பரப்பி வருகின்றனர்.

    *குற்றங்கள் எண்ணிக்கை தி.மு.க. ஆட்சியில் குறைந்துவருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு போடுகிறோம்.

    * எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சி சார்ந்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்றார்.

    Next Story
    ×