search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருகிற 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை பயணம்
    X

    வருகிற 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை பயணம்

    • அன்று மாலை காரைக்குடியில் நடைபெறும் திமுக கட்சி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
    • பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

    ஏற்கனவே கோவை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.

    அங்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஏற்பாட்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    அன்று மாலை காரைக்குடியில் நடைபெறும் திமுக கட்சி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவு காரைக்குடியில் தங்குகிறார்.

    22-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    பின்னர் மதுரைக்கு வந்து அங்கிருந்து சென்னை திரும்புவார்.

    Next Story
    ×