search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்தபோது சிரிப்புதான் வந்தது- மு.க.ஸ்டாலின் பேச்சு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்தபோது சிரிப்புதான் வந்தது- மு.க.ஸ்டாலின் பேச்சு

    • அ.தி.மு.க. சார்பில் கருப்புச் சட்டை அணிந்து வந்தபோது எனக்கு கோபம் வரவில்லை.
    • ஆளுநரை கண்டித்து கருப்புச் சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் கருப்புச் சட்டை அணிந்து வந்தபோது எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்புச் சட்டை போடுகிறார்களே என்று மகிழ்ச்சியடைகிறேன். கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு வரலாம். அது உங்கள் உரிமை, அதில் நான் தலையிட விரும்பவில்லை. என்னோட கேள்வியெல்லாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டமன்றத்தை மதிக்காமல் ஓர் ஆளுநர் நடந்து கொள்கிறார். அவரைக் கண்டித்து கருப்புச் சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி.

    இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியைகூட தர மறுத்து, இரக்கமில்லாமல் நடந்துகொள்கிற ஓர் ஒன்றிய அரசினைக் கண்டித்து, நீங்கள் கருப்புச் சட்டை அணிந்திருந்தால் நான் உங்களை வாழ்த்தியிருப்பேன், மகிழ்ச்சியடைந்திருப்பேன். தேசிய கல்விக் கொள்கை மூலமாக பள்ளிக் கல்வியையும், யு.ஜி.சி. மூலமாக கல்லூரிக் கல்வியையும் சிதைக்க நினைக்கிற, பாசிசக் கல்விக் கொள்கையை கண்டித்து கருப்புச் சட்டையை நீங்கள் அணிந்திருந்தால், மனதார உங்களைப் பாராட்டியிருப்பேன். ஆட்சியில் இருந்த காலம் முதல் பா.ஜ.க.வுக்கு நீங்கள் துணையாக நின்றிருக்கிறீர்கள். இருட்டு அரசியல் நடத்துகிறவர்களுக்கு கருப்புச் சட்டை அணிய எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×