search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2026 தேர்தலில் தி.மு.க. தோற்கும்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    2026 தேர்தலில் தி.மு.க. தோற்கும்- ஓ.பன்னீர்செல்வம்

    • தி.மு.க. விற்கான ஆதரவு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்கிறது
    • தி.மு.க. ஆட்சியை இழக்கும், எந்த வழியிலும் தி.மு.க. வெற்றி பெற முடியாது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆட்சியில் இருக்கின்ற ஒரு கட்சி தேர்தலில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கின்றபோது, தான் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த நலத் திட்டங்கள், மக்களுக்கு ஆற்றிய வளர்ச்சித் திட்டங்கள், நாட்டில் நிலவுகின்ற அமைதியான சூழ்நிலை, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு, மக்கள் மீது கூடுதல் வரி விதிக்காதது, மாநில உரிமைகளை நிலைநாட்டியது, நாட்டின் நிதி மேலாண்மை போன்றவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி வெற்றி பெறுவது என்பது நேர்மையான அரசியலுக்கு எடுத்துக்காட்டு.

    ஆனால், உண்மைக்கு மாறான தகவல்களை மக்களிடம் கூறி குறுக்கு வழியிலும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம். சமூக நீதிக்கு எதிரான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள்.

    தி.மு.க. விற்கான ஆதரவு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்கிறது. நீதி தவறி ஆட்சி நடத்தும் மன்னர், மக்களையும், பொருளையும் ஒரு சேர இழப்பார் என்பதற்கேற்ப, 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், தி.மு.க. ஆட்சியை இழக்கும், எந்த வழியிலும் தி.மு.க. வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×