என் மலர்
தமிழ்நாடு
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் போக்சோ வழக்கில் கைது
- பெருமாள் அவ்வப்போது மது அருந்தி விட்டு தகராறு செய்வதால், பலர் அச்சமடைந்து அவர் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
- சிறுமிகளின் பெற்றோரிடம் ஹெல்ப்லைன் சூப்பர்வைசர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பெருமாள் (வயது40) டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில், தருமபுரி அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த, சிறுமிகளின் பெற்றோர் நேற்று அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.
அதில், பெருமாள், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்தனர். மேலும், சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கும் புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து, அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா நேற்று பெருமாளை கைது செய்து விசாரித்தனர்.
மேலும், பெருமாள் மீது கடந்த ஓராண்டிற்கு முன், பெண் ஒருவரை அத்துமீறி பாலியல் தொல்லை செய்ததாக, புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெருமாள் அவ்வப்போது மது அருந்தி விட்டு தகராறு செய்வதால், பலர் அச்சமடைந்து அவர் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இதில், 3 சிறுமிகள் பாதிப்பு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் புகார் அளிக்க வரலாம் என்பதால், அதியமான்கோட்டை மற்றும் நல்லம்பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமிகளின் பெற்றோரிடம் ஹெல்ப்லைன் சூப்பர்வைசர் ஜோதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பாலியல் தொல்லை குறித்த சம்பவங்கள் தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.