என் மலர்
தமிழ்நாடு

சுனிதா வில்லியம்ஸ் பயணம் விடாமுயற்சிக்கு சான்று- எடப்பாடி பழனிசாமி
- நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோருக்கு எனது சல்யூட்.
- சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார்.
சென்னை:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் SpaceX-ன் 'ட்ராகன்' விண்கலம் மூலம் 17 மணிநேர பயணத்திற்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதையடுத்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து, நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோருக்கு எனது சல்யூட்.
குறிப்பாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார். அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல, பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.
நான்கு பேர் கொண்ட குழு - க்ருவ்9 உங்களை வரவேற்கிறோம். உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.