என் மலர்
தமிழ்நாடு
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
- காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
- இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலககுறைவால் நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை நந்தம் பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் , தா.மோ.அன்பரசன், கோவி செழியன், கனிமொழி எம்.பி., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.க.தலைவர் கி.வீர மணி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், த.மாகா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத் தினார்கள். தொடர்ந்து பல்வேறு கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை தொடர்ந்து இன்று மாலை அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு பின்னர் வீட்டு அருகே உள்ள எல்.அன்.டி காலனியில் உள்ள மின் மயானத்துக்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.