search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணி ம.பொ.சி சாலையில் உள்ள காமராஜர் மார்க்கெட்டின் பெயரை மாற்றக்கூடாது- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
    X

    திருத்தணி ம.பொ.சி சாலையில் உள்ள காமராஜர் மார்க்கெட்டின் பெயரை மாற்றக்கூடாது- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    • தமிழக அரசு, பெருந்தலைவர் பெயருக்கும் புகழுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • பல ஆண்டுகளாக திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஒரு காய்கறி மார்க்கெட் உள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, பெருந்தலைவர் பெயருக்கும் புகழுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஒரு காய்கறி மார்க்கெட் உள்ளது. இது பெருந்தலைவர் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. இப்போது இந்த மார்க்கெட் பராமரிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறும் போது கலைஞர் நூற்றாண்டு மார்க்கெட் என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    குறிப்பாக காமராஜர் காய்கறி மார்க்கெட் பெயர் மாற்றமில்லாமல் தொடரவும், ஏற்கனவே அகற்றப்பட்ட மகாத்மா காந்தி திருஉருவச் சிலையை காமராஜர் மார்க்கெட் அருகாமையிலேயே வைக்க வேண்டும் என்றும் வியாபாரிகளும், பொது மக்களும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×