search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.17½ கோடி அடகு நகை மோசடி வழக்கு: திருப்பூர் தனியார் வங்கியில் கேரள போலீசார் திடீர் சோதனை
    X

    ரூ.17½ கோடி அடகு நகை மோசடி வழக்கு: திருப்பூர் தனியார் வங்கியில் கேரள போலீசார் திடீர் சோதனை

    • மாதா ஜெயக்குமார் வடகரை எடோடியில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.
    • மாதா ஜெயக்குமாருடன் திருப்பூர் வந்த கேரள போலீசார் தனியார் வங்கியின் இருவேறு கிளைகளில் ஆய்வு செய்தனர்.

    திருப்பூர்:

    திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாதா ஜெயக்குமார் (வயது 34). இவர் கோழிக்கோடு மாவட்டம் வடகரை எடோடியில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.

    பின்னர் இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு உள்ள வங்கி கிளைக்கு மாற்றப்பட்ட நிலையில், வடகரை எடோடி கிளைக்கு புதிய மேலாளர் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அங்கு தணிக்கை நடைபெற்றது.

    அதில் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26.8 கிலோ நகைகள் போலியாக வைத்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் வங்கி மேலாளராக இருந்த மாதா ஜெயக்குமார் எர்ணாகுளம் கிளையில் பொறுப்பேற்காமல் தலைமறைவானார்.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் அந்த நகைகளில் சிலவற்றை தன் நண்பரான திருப்பூர் சந்திராபுரம் கேஎன்பி., காலனி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கார்த்திக் (29) என்பவரிடம் கொடுத்து அடமானம் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து மாதா ஜெயக்குமாருடன் திருப்பூர் வந்த கேரள போலீசார் தனியார் வங்கியின் இருவேறு கிளைகளில் ஆய்வு செய்தனர். அங்கு 4.6 கிலோ நகையை மீட்டனர்.

    இந்தநிலையில் இன்று கேரளாவில் இருந்து வந்த சிறப்பு தனிப்படை போலீசார் வங்கியில் மீண்டும் சோதனை நடத்தினர். மாதா ஜெயக்குமார் லாக்கரில் வைத்துள்ள நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×